2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கச்சதீவு விடயம் தொடர்பில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு

Freelancer   / 2022 மே 29 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

மீனவர்களின் கருத்துக்களை அறிந்துகொண்ட பின்னரே  கச்சதீவு விடயம் பற்றி தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் கச்சத்தீவை மீட்ப்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென கோரிக்கை விடுத்திருந்தார்.

எனவே இது தொடர்பில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு என்ன என வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது இரண்டு நாடுகளின் உடன்படிக்கை. இந்த நிலையில் கச்சதீவு எங்களுடைய மீனவர்களின் நலன்களுக்கு சாதகமாக இருக்குமானால் எங்களுடைய மீனவர்களின் நலன்களை ஒட்டி இந்திய அரசுடன் பேசவேண்டும்.  

அதற்கு முன்னதாக கச்சதீவை இந்தியா  பொறுப்பேற்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கருத்து தொடர்பில்  நாம் முதலில் எங்களுடைய மீனவர்களின் கருத்துகளை அறிய வேண்டும் அவர்களின் கருத்துக்களை ஒட்டியே எங்களுடைய முடிவுகள் அமையும்  அதற்கு முன்னதாக எழுந்தமானமாக கருத்துக்களை கூற முடியாது.

அத்தோடு, இலங்கை இந்திய மீனவர்களின் இழுவை படகு  பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளது எனவே அது தொட்பில் இந்திய அரசுடன் பேசும் போது கச்சத்தீவு விடயம் பற்றியும் பேச வேண்டும். இதுவொரு இராஜதந்திர ரீதியான நடவடிக்கை எனவும் மாவை சேனாதிராஜா அவர்கள் தெரிவித்தார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X