Editorial / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
உரும்பிராய் - செல்வபுரம் பகுதியில் கஞ்சா பீடியை வைத்திருந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார்.
சிவில் உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸார், வீதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்ற இளைஞனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதன்போது, அவரது உடமையில் இருந்து ஒரு கஞ்சா பீடி கைப்பற்றப்பட்டது.
குறித்த இளைஞனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
20 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
22 minute ago