2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா கடத்தியவர்களுக்கு விளக்கமறியல்

George   / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஊரிக்காடு கடற்பகுதியூடாக வல்வெட்டித்துறைக்கு 113.7 கிலோகிராம் கஞ்சா கடத்திய, தொண்டமனாறு, கெருடாவில் மற்றும் காட்டுப்புலம் பகுதியினைச் சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி கந்தசாமி, வௌ்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த 11ஆம் திகதி, ஊரிக்காடு கடற்பகுதியூடாக கஞ்சா கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சிவில் உடையில் சென்ற பொலிஸார், சந்தேக நபர்கள் மூவரை கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட 25,26,36 வயதுடைய மூன்று சந்தேக நகர்களிடமிருந்து, 1 கோடி 69இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சாவையும் கைப்பற்றினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X