Gavitha / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நா.நவரத்தினராசா
வலிகாமம் வடக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்படையினரின் பாதுகாப்பு கடல் எல்லை, 4 கிலோமீற்றர் தூரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளமையால், அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 650 மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக, சேந்தாங்குளம், வலித்தூண்டல், சீந்துப்பந்தி போயிட்டி மற்றும் ஊறணி பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
காங்கேசன்துறை துறைமுகப் பாதுகாப்பெனக் கூறி, ஏற்கெனவே பாதுகாப்பு எல்லையாக இருந்த பிரதேசத்திலிருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் வரை கடற்படையினரின் எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் காங்கேசன்துறை துறைமுக பாதுகாப்பு எல்லையை, கீரிமலைக்கேணி பகுதியை அண்டிய பகுதியில் அமைத்திருந்த கடற்படையினர், தற்போது அங்கிருந்து 4 கிலோமீற்றர் வரையில் நீடித்துள்ளனர். மீனவர்களின் படகுகள், தோணிகள் உட்செல்லாதவாறு, கம்பிகளைக் கொண்டு 'போயா' எனப்படும் தடையை அமைந்துள்ளனர்.
இதனால், சேந்தாங்குளம், வலித்தூண்டல், சீந்துப்பந்தி, போயிட்டி மற்றும் ஊறணி பகுதி கடற்றொழிலாளர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாதகல் போன்ற பகுதிகளின் தொழிலாளர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பாதுகாப்பு எல்லையை வரையறுத்து, அடையாளமிட்டுள்ள பகுதியில் பாரிய இரும்புகளைக்கொண்டு மிதவைகள் அமைத்துள்ளமையால், அதில் படகுகள் மோதி சேதமடையும் ஆபத்துக்களும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.
எனினும், இது தொடர்பில் கடற்படையினருடன் தொடர்பு கொண்டு வினவியபோது, பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே எல்லைகள் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
38 minute ago
49 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
49 minute ago
56 minute ago
1 hours ago