Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூன் 14 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
நெடுந்தீவு 5ஆம் வட்டாரப் பகுதியில் இருந்து, கச்சதீவு கடற்பகுதிக்கு நண்டு பிடிக்கச்சென்ற தந்தையும் மகனும் காணாமல் போயுள்ளதாக, நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (13) இரவு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யேசுதாசன் ஜூட் சசிகுமார் (வயது 38) மற்றும் அவரது மகனான ஜூட் சசிகுமார் விஜிகுமார் (வயது 15) ஆகிய இருவருமே இவ்வாறு காணாமற்போயுள்ளனர் என்று, ஜூட் சசிகுமாரின் மேரி கொலிஸ்ரிகா, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (13) மாலை, சக மீனவர்கள் 30 பேருடன் நண்டு பிடிப்பதற்காக கச்சதீவு கடற்பகுதிக்கு, இவர்கள் சென்றுள்ளனர். இருப்பினும், ஏனையவர்களின் படகுகள் கரை திரும்பியுள்ள போதிலும், தந்தையும் மகனும் பயணித்த படகு, இதுவரையில் கரை திரும்பவில்லை என, முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டை அடுத்து, காணாமற்போன இருவரையும் கண்டுபிடிப்பதற்காக, கடற்படையினரின் உதவியை நாடியுள்ளதாக, நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .