Editorial / 2020 மே 22 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், வீசிய கடும் காற்று காரணமாக, நேற்று முன்தினம் (20) முதல் நேற்று (21) வரையான 24 மணித்தியாலங்களுக்குள், 10 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில், நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், கடுங்காற்றால், 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளனவெனவும் கைதடி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றும் சேதமடைந்துள்ளதெனவும் கூறினார்.
மேலும், மயிலிட்டி பகுதியில் மரமொன்று முறிந்து விழுந்ததில், பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றுத் தெரிவித்த அவர், நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போனநிலையில், பாதுகாப்பாகக் கரை சேர்ந்தார் என்றும் கூறினார்.
இந்த வானிலையானது, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கும் என்பதால், கரையோர மக்கள், மீனவர்கள் உட்பட அனைவரும் அவதானமாகச் செயற்படுமாறும் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்க்குமாறும், சூரியராஜ் அறிவுறுத்தினார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago