2025 மே 17, சனிக்கிழமை

கண்காட்சிகூடத்தில் சஜித்

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் என்ரபிறைஸ் ஸ்ரீ லங்கா கண்காட்சியில், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ இன்று கலந்துகொண்டார். 

இந்நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சர் சஜித் பிரேமதாஸவை நிதி அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றார்.

கண்காட்சியில் கலந்துகொண்ட அமைச்சர் சஜித்பிரேமதாஸ, கண்காட்சிக் கூடங்களுக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கு அரசாங்க தகவல் திணைக்களத்தால் அமைக்கப்பட்டுள்ள ஊடகவலையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினார். 

இந்தக் கண்காட்சி நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன், யாழ். மாநகரசபை மேயர் ஆர்னோல்ட், யாழ்ப்பாணம் மாவட்டச் செயளாலர் நா.வேதநாகன் எனப் பலர் காலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .