Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 27 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிதர்ஷன்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு சர்வதேச நீதி கோரி, யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணியொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது, அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டனர்.
இது தொடர்பான கலந்துரையாடல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புக்களின் தலைமையில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் அ.லீலாவதி, “எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் ஆரம்பிக்கும் கண்டனப் பேரணி, முற்றவெளியில் நிறைவடையும்.
“இந்தப் பேரணியில் கட்சி மற்றும் அரசியல் ரீதியான வேறுபாடுகளை கடந்து இந்தப் போராட்டத்தை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
4 hours ago
8 hours ago
29 Apr 2025