2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கதவைத் திறந்த சாரதி கைது

Niroshini   / 2016 ஜூன் 29 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கருகில் வானின் கதவைத் திறந்தமையால் விபத்துக்குள்ளாகிய மாணவன் உயிரிழந்தமை தொடர்பில், வேனின் கதவைத் திறந்த வானின் சாரதியை, நேற்று புதன்கிழமை (29) கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த மேற்படி நபரை, சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன் குறித்த சாரதியை கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிவன் கோயிலுக்கு அருகில் கடந்த 23ஆம் திகதி, சிறியரக வாகனத்துடன் மோதுண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்கும் தாவடி, காளிகோவிலடியைச் சேர்ந்த தேவராஜா நிறோஜன் (வயது 17) என்ற மாணவன் உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பில் சிறியரக வாகனச் சாரதியைக் கைது செய்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்ட போது, விபத்து நடைபெற்ற இடத்தில் அமைந்துள்ள கடையொன்றின் சி.சி.டி.வி கமெரா பதிவு கிடைத்தது.

அதில், விபத்து இடம்பெற்ற காட்சியைப் பார்த்த போது, அந்தக் கடையின் முன்பாக நிறுத்தப்பட்ட வேனொன்றின் கதவை, அந்த வானின் சாரதி சடுதியாக திறந்தவேளை, பின்னால் சைக்கிளில் வந்துகொண்டிருந்த மாணவன் வான் கதவுடன் மோதுண்டு, கீழே வீழ்ந்துள்ளமையும், அதன் பின்னரே, சிறியரக வாகனம் மாணவனை மோதியமையும் தெரியவந்தது.

இதனையடுத்து, வேனின் இலகத்தகட்டு இலக்கத்தை வைத்து, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினூடாக வானைச் செலுத்தி வந்த புத்தளத்தைச் சேர்ந்த நபரை இனங்கண்ட
பொலிஸார், அவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

பொலிஸ் நிலையம் வந்த நபரை விசாரணை செய்த பொலிஸார், விசாரணை முடிந்தப் பின்னர் அவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்துள்ள சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்;ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

சிறியரக வாகன சாரதி, ஏற்கெனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X