Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஜூன் 27 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகரில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
கணவரால் 12 இடங்களில் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
எனினும் கழுத்து, நெஞ்சு என 12 இடங்களில் கத்திக்குத்து ஆழமாக பதிந்திருந்த்தால் அவருக்கு அதிகளவு குருதி வெளியேறியது. அதனால் அவர் உயிரிழந்தார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
இவ்வாறு உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தாயார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago