Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
கி.பகவான் / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். வரணி கரம்பைக் குறிச்சிப் பகுதியில், கத்தி முனையில் 89 பவுண் தங்க நகைகள், கடந்த திங்கட்கிழமை இரவு கொள்ளையிடப்பட்டுள்ளதாக, முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதியில் உள்ள வீடொன்றுக்கு புலம்பெயர் நாட்டிலிருந்து குடும்பமொன்று வந்திருந்தது. புலம்பெயர் நாட்டிலிருந்து வந்த குடும்பத்தைப் பார்க்க அவரது உறவுப் பெண்ணும் குடும்பத்துடன் வந்திருந்தார்.
இந்நிலையில், வீட்டிலிருந்த ஆண்கள் அனைவரும் வெளியில் சென்றிருந்தவேளை, முகத்தை மூடி மறைத்துக் கட்டிய நிலையில் உள்நுழைந்த திருடர்கள், அங்கிருந்த இரண்டு பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர்களிடமிருந்த 89 பவுண் நகைகளை கொள்ளையடித்துச் தப்பிச் சென்றுள்ளனர்.
திருட்டுப்போன நகைகளின் பெறுமதி சுமார் 40 இலட்சம் இருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக, கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
3 hours ago