2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கத்தியால் வெட்டிய இளைஞனுக்கு விளக்கமறியல்

George   / 2017 ஜனவரி 06 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வீதியில் சென்ற பெண்ணிடம் தகாத வார்த்தை பேசிய சம்பவத்தினை தட்டிக்கேட்ட பெண்ணின் சகோதரன் மீது, கத்தியால் வெட்டிய சந்தேகநபரான 22 வயதுடைய இளைஞனை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன், புதன்கிழமை (04) உத்தரவிட்டார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி, உடுவில் ஆலடி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் , ஊரை விட்டு தப்பி சென்று வெளிமாவட்டத்தில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் சந்தேகநபர், உடுவில் பகுதிக்கு வந்துள்ளதாக  சுன்னாகம் பொலிஸாருக்கு செவ்வாய்க்கிழமை (03தகவல் கிடைத்துள்ளது.

அதனையடுத்து, ந்தேகநபரை கைதுசெய்த பொலிஸார், மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X