2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தினுள் விகாரை வேண்டாம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தினுள் கட்டப்படும் பௌத்த விகாரையின் கட்டடப்பணிகளை உடன் நிறுத்துமாறு கோரி வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றது.

குறித்த அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை கனாகம்பிகை அம்மன் ஆலய வளாகத்தினுள் கட்டப்படும் புத்தர் சிலை மற்றும் விகாரையின் கட்டடப் பணிகளை உடன் நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் புத்த சாசன அமைச்சர் ஆகியோரை வடமாகாண சபை கோருவதாக கோரி  பிரேரணை ஒன்றினை முன் மொழிந்தார்.

அதனை ஆளும் கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் வழி மொழிந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X