2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கனிய வளங்கள் தொடர்பாக நடவடிக்கை

எம். றொசாந்த்   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கனிய வளங்கள் உரிய அளவுகளை மீறி அகழப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் 101ஆவது அமர்வு இன்று (10) நடைபெற்றபோது உறுப்பினர் து. ரவிகரனால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

“முல்லைத்தீவு மாவட்டத்தின் கனிய வளங்கள் உரிய அளவுகளை மீறி அகழப்படுவதுடன் அவ்விடங்கள் மீள்நிரப்பப்படுவதில்லை. இதனால் நீண்ட காலங்களாக பாதுகாக்கப்பட்ட கனிய வளங்கள் அழிவடைகின்றன. இயற்கை சூழல் சமநிலை பாதிக்கப்படுகின்றது.

அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லக்கூடிய செயல்களில் ஈடுபடுபவர்களையும் துணைபோகின்றவர்களையும் இனங்கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ரவிகரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .