2025 மே 10, சனிக்கிழமை

கப்பலில் தீ

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த், செந்தூரன் பிரதீபன், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம், மயிலிட்டி கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில், திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், இன்று (18) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மயிலிட்டி கடலில், பழுதடைந்த நிலையில் நங்கூரமிடப்பட்டு இருந்த கப்பலே, இவ்வாறு தீ பிடித்துள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை முதல், கடற்படையினர் தீயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபோதிலும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் போனது. இதனால், இன்று பகல் கப்பலின் இயந்திர பகுதிக்கு தீ பரவியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X