2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

‘கருத்து தெரிவிக்க முடியாது’

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

வட மாகாண அமைச்சரவை தொடர்பாக கேள்வியெழுப்பியபோது, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அது தொடர்பாகத் தற்போது கருத்துத் தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற யாழ். பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்தார்.

இதன்பின்னர், ஊடகவியலாளர்கள், வட மாகாண அமைச்சர்கள் தெரிவித்த கருத்துத் தொடர்பில் முதலமைச்சரின் கருத்தைக் கேட்ட போது, அவ்விடயங்கள் தொடர்பாக தற்போது கருத்துத் தெரிவிக்க முடியாது என முதலமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்ட  பாரிய சுகாதார அபிவிருத்தி திட்டத்துக்காக, நெதர்லாந்து அரசாங்கம் ஒப்புதல் வழங்கிய 1400 கோடி ரூபாய் திரும்பிச் செல்லுமாக இருந்தால், அதற்கு வட மாகாண முதலமைச்சரே பொறுப்புக் கூற வேண்டும் என வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .