2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கர்ப்பிணி கொலை விவகாரம்: சாட்சியங்கள் பதிவு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில், 7 மாதக் கர்ப்பிணி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான சாட்சியப் பதிவு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில், செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றது.

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில், 7 மாதக் கர்ப்பிணியும் 4 வயது சிறுவன் ஒருவரின் தாயாருமான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர், கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதியன்று, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

அவருடைய கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மண்டைதீவு பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த இருவர், அதே தினத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த கர்ப்பிணியின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள், செவ்வாய்க்கிழமை (14), ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் இடம்பெற்றன. இதன்போது, படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரது சாட்சியம் மற்றும் சடலத்தை முதலில் கண்ட அயல் வீட்டுப்பெண் ஆகியோரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இரண்டாவது சாட்சியமான அயல் வீட்டுப் பெண்ணின் சாட்சியம் முழுமையாகப் பதிவு செய்யப்படாத நிலையில், அப்பெண்ணின் எஞ்சிய சாட்சியமும் ஏனைய சாட்சியங்களையும், அடுத்த வழக்குத் தவணையான எதிர்வரும் 22ஆம் திகதியன்று பதிவு செய்ய நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X