2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கர்ப்பிணி படுகொலை; சகோதரர்களுக்கு விளக்கமறியல்

George   / 2017 ஜனவரி 26 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எம்.றொசாந்த்

ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில், 7 மாத கர்ப்பிணியை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த சகோதரர்கள் இருவரையும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம்.றியால், புதன்கிழமை உத்தரவிட்டார்.

பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியிலேயே, ​அன்றைய வழக்கு விசாரணைக்கு, சந்தேகநபர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்.

7 மாத கர்ப்பிணியும் 4 வயதுக் குழந்தையின் தாயுமான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவரே, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார். குறித்த சம்பவம், கொள்ளையிடும் நோக்கில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட போதும், உண்மையான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என்று, நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்தே, சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

பெண்ணைத் தாக்கி கொலைசெய்ததாகச் சந்தேகிக்கப்படும் சகோதரர்களை, மண்டைதீவு பகுதியில் முச்சக்கரவண்டியிலிருந்தே பொலிஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்படும்போது, இவர்களுடைய ஆடைகளில் இரத்தக்கறை இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X