Janu / 2026 மார்ச் 12 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் மற்றும் முச்சக்கர வண்டி விபத்தில், சுற்றுலாப் பயணிகள் இருவர் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்குச் சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 67 மற்றும் 70 வயதுடைய இருவர், வாடகை கார் ஒன்றில் மண்கும்பான் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் காரில் பயணித்த பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர், காரின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் என மொத்தம் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துத் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

12 Mar 2026
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Mar 2026
12 Mar 2026