2025 ஜூலை 05, சனிக்கிழமை

கற்றாளை பிடுங்கிய இருவர் கைது

எம். றொசாந்த்   / 2019 ஜூன் 18 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மண்கும்பான் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கற்றாளை பிடுங்கிய இருவர் நேற்று (17) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் கற்றாளைகள் பிடுங்கப்படுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .