2025 மே 05, திங்கட்கிழமை

’கலாசாரப் படுகொலை இடம்பெறுகிறது’

Niroshini   / 2021 மே 12 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இனப்படுகொலை நடந்த முல்லை மண்ணில், மீண்டும் கலாசாரப் படுகொலை இடம்பெறுவதாக,  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், 2009ஆம் ஆணடில் முள்ளிவாய்க்கால் மண்ணில் எப்படி ஒரு தமிழினப் படுகொலை அரங்கேற்றப்பட்டதோ, அதே மே மாதத்தில், முல்லைத்தீவு – குமழமுனை, குருந்தூர் மலையில், தமிழர்களின் கலாசார மத அடையாளங்களை பிரதிபலித்த ஆதிசிவன் ஐய்யனார் அமைந்திருந்த இடத்தில், ஒரு கலாசார படுகொலை அரங்கேறியுள்ளதாகத் தெரிவித்தார்.

தொல்லியல் என்ற போர்வையில், குறித்த பகுதியைக் கையகப்படுத்தி, பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு, புத்தரின் சிலையை வைத்து, பௌத்த பிக்குகளால் பிரித்து ஓதல் நடைபெற்றுள்ளதாதகச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான ஒரு கலாசாரப் பகுதி திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுவது, தமிழர்களின் கலாசாரத்தை இராணுவப் பிடிக்குள் வைத்து மேற்கொள்ளப்படும் படுகொலையாகவே அமைந்துள்ளாகவும் கூறினார்.

'கொரோன பெரும் தொற்று எனப் பிரகடனப்படுத்தி, இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களை கோரும் அரச இயந்திரம், தாங்களே அப்பட்டமாக மீறுகின்ற மிக அவலமான நிலை குருந்தூர் மலையில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், சட்டம் யாருக்கு என்ற கேள்வி  எழுந்துள்ளதுடன், எதேச்சதிகாரம் மேலோங்கி உள்ளதையே இவ்வாறான செயற்பாடுகள் வெளிப்படுத்தியுள்ளன' எனவும், சபா குகதாஸ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X