2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

கலா கைது: சிவாஜிலிங்கம் கண்டனம்

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஐயகலா மகேஸ்வரனின் கைது செய்யப்பட்டதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிககளின் மீள் உருவாக்கம் தொடர்பில் உரையாற்றிய குற்றச்சாட்டு தொடர்பில், குற்றத் தடுப்பு பிரிவால் விஜயகலா மகேஸ்வரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதற்கமைய, இன்று விசாரணைக்காகச் சென்ற அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, அவர் மேற்கண்டவாறு கண்டனம் வெளியிட்டார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விஜயகலா மகேஸ்வரன் பேசிய பேச்சு தொடர்பில் விசாரணைகள் நடந்திருக்கின்றன. அதற்கமைய அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஆகக் குறைந்தது இரண்டு வாரமாவது தடுத்து வைக்க முயற்சி நடைபெறுவதாகவும் அண்மையில் கொழும்புக்கு பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது அவரிடம் தெரிவித்திருந்தேன்.

“ஆகவே சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஊடாக பிணை மனுவைக் கோர வேண்டும் இல்லாவிட்டால் முன் பிணை கோருங்கள் என்று நான் கூறியிருந்தேன்.

“ஏனெனில் அவ்வாறு நாங்கள் கோரியதற்கமைய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் எனக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகவே அதனை நீங்களும் செய்து கொள்ளுங்கள் என்றேன்.

“ஆனாலும் அவருக்கு யார் என்ன ஆலோசனையைக் கூறினார்களோ தெரியவில்லை. அவர் அவ்வாறு செய்யவில்லை. எதுவானாலும் அவர் கைது செய்யப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

“இதுவோர் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை ஆகும். அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் தான் அவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இதுவொரு நீதிக்கு விரோதமான அரசாங்கத்தின் எதேச்சதிகரமான போக்கு” என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .