Editorial / 2018 ஜூலை 07 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக, யாழில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
"தமிழ்த் தலைவி" என குறிப்பிட்மே, யாழ் நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
யாழில், கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில், புலிகளை மீள உருவாக்க வேண்டுமென, விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியிருந்தார்.
இந்த உரைக்கு தெற்கிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.
அத்துடன், விஜயகலாவின் உரை குறித்தான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், பிரதமரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இந்நிலையில், தமிழ் மக்களுக்காக தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக, அறிவித்திருந்தார். இதையடுத்தே, அவருக்கு ஆதரவாக குடாநாட்டின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்தச் சுவராட்டியில், “தமிழ் மக்களின் நிம்மதியான வீழ்வுக்கு அன்று உயிர் துறந்தவர் மகேஸ்வரன்; இன்று பதவி துறந்தவர் விஐயகலா” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025