Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 26 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்படும், “கல்விக்கான நடைபவனி”, யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (29) இடம்பெறவுள்ளது.
கல்லூரியின் 1992ஆம் ஆண்டின் உயர்தரப் பிரிவு மாணவர் குழாம் இணைந்து, வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களில், கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறது.
இந்தப் பயணம், யாழ். இந்துக் கல்லூரி முன்றலிலிருந்து, காலை 7.30 மணிக்கு, யாழ். நகரினூடாக, பாடசாலை மைதானத்தை, காலை 9.30 மணிக்கு வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
கல்விக்கான ஓட்டம் எனப்படும், மரதனோட்ட நிகழ்வுகள், இலண்டன், மெல்பேண், டொரன்டோ ஆகிய நகரங்களில், ஜூலை 29ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு சமாந்தரமாகவே, கல்விக்கான நடைபயணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் பரீட்சை முடிவுகளின்படி, கல்வியில் மிகவும் பின்தங்கிய வலயங்களாக, தமிழ்மொழி மூலமான வலயங்களே காணப்படும் நிலையில், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், அதே போல், நேரடியான செயற்பாடுகள் மூலமாக மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவும், இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற, rfe.jhc92.com என்ற இணையத்தையோ அல்லது info@jhc92.com என்ற மின்னஞ்சலையோ அல்லது 0778388957 என்ற அலைபேசியையோ நாட முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .