Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
மிகவும் பின் தங்கிய கிராமங்களில் வாழும் சிறார்களின் கல்வியை மேம்படுத்;துவதன் மூலம் அக் கிராமங்களை அபிவிருத்திப்பாதைக்கு கொண்டு செல்லமுடியும் என மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஒட்டறுத்தகுளம் கிராமத்தில் 850 பயனாளிகள் நன்மையடைக்கூடிய வகையில் புதிதாக அமைக்கப்பட்ட சனசமூக நிலையத்துடன் கூடிய பொதுமண்;டபத்;தின் திறப்பு விழா நிகழ்வு திங்கட்கிழமை (19) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'கிராமத்தின் தேவைகருதி அமைக்கப்;பட்ட இக் கட்;டடத்தின் மூலம் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் நன்மைகளை பெற்றுக்கொள்ளவேண்டும். கட்டடங்களை அமைத்து திறந்து வைப்பதுடன் மட்டும் நின்றுவிடாது குறித்த கட்டடங்களை பயன்படுத்தி இந்த கிராமங்கள் முன்னோக்கி செல்லவேண்டும்.
சனசமூக நிலையத்துடன் கூடிய ஒரு மண்டபமாக இன்று திறக்கப்படும் இந்த கட்டடத்;தினால் ஸ்ரீ கிராமத்தில் வாழும் சிறார்கள், மாணவர்கள் உரிய பயனைப்பெற்று தங்களது கல்வியை மேம்படுத்;துவதன் மூலம் இதுபோன்ற பின் தங்கிய கிராமங்களை அபிவிருத்திப்பாதைக்கு கொண்டுசெல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த புதிய கட்டடத்தின் திறப்பு விழா நிகழ்வில் காணி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், வன்னி விளாங்குளம் மற்றும் பாலிநகர் கிராம அலுவலர்கள் இக்கிராம மக்;கள் என பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
55 minute ago
1 hours ago