Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜனவரி 08 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்குப் பகுதிகளில் இடம்பெறும் களவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலாளர் கே.ஸ்ரீமோகன் தெரிவித்தார்.
உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்குப் பகுதிகளை முதலமைச்சர், வியாழக்கிழமை (07) நேரில் சென்று பார்வையிட்டார்.
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பயன்தரும் மரங்கள் வெட்டப்பட்டு, கடத்தப்படுவதாக தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதா? என பிரதேச செயலரிடம் வினாவினார். அதற்குப் பதிலளிக்கையிலேயே பிரதேச செயலர் மேற்கண்டவாறு கூறினார்.
'பற்றைகளை அழிப்பதாகக் கூறி சிலர், பயன்தரு மரங்களையும் வெட்டிச் செல்கின்றனர். அத்துடன், எஞ்சியுள்ள வீடுகளில் களவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்கின்றோம்' என பிரதேச செயலர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .