2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

Niroshini   / 2016 ஜனவரி 06 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்துக்கு முன்னால் உள்ள வீடொன்றில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவருடைய சடலத்தை மன்னார் பொலிஸார், இன்று புதன்கிழமை காலை மீட்டுள்ளனர்.

மன்னார், சின்னக்கடையைச் சேர்ந்த பி.யூட் கோடிஸ்வரன்(வயது 48) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும்; குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து கடந்த 8 வருடங்களுக்கு முன் இலங்கைக்கு வந்து மன்னாரில் வீடொன்றை வாடகைக்கு பெற்று தனிமையில் வசித்து வந்ததாகவும் பாடசாலை மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆங்கில பாடம் நீண்ட காலமாக கற்பித்து வந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த நபர் மர்மமான முறையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X