2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

செம்மணிப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

Freelancer   / 2025 ஒக்டோபர் 02 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதமையாலேயே இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று புதன்கிழமை நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக்கான பாதீட்டுக்கான அங்கீகார அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்க அரச சட்டத்தரணி கால அவகாசம் கோரினார். இதைத் தொடர்ந்தே வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிக்குத்  தவணையிடப்பட்டது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X