Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 டிசெம்பர் 27 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
தேசிய நீர்; வளங்கள் வடிகால் அமைப்பு சபையின் நிபுணத்துவம் வாய்ந்த குழுவினால் மேற்கொண்ட ஆய்வு சுன்னாகம் பகுதியினை சுற்றியுள்ள கிணறுகளில் பாரவுலோகங்கள் போன்ற எண்ணெய் கழிவுகளும் மற்றும் மலக்கழிவுகளும் கலந்துள்ளதனை உறுதிப்படுத்தி குறித்த பகுதிகளில் உள்ள குடிநீரினை பருகவேண்டாம் என கூறுகின்றது.
ஆனால், வடமாகாண விவசாய அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர்;குழுவின் அறிக்கையில் எண்ணெய் கழிவு இல்லை என கூறப்பட்டுள்ளது. இதில் எது உண்மை? என ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வி எழுப்பினர்;.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் கழிவு எண்ணெய் கலப்பால் மாசடைந்த நீரை குடிக்கலாமா? இல்லையா? என தெளிவுபடுத்துமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று சுன்னாகம் நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்றது.
இதில் கலந்து ஷகொண்டு கருத்து தெரிவித்த எஸ்.செல்வராசா என்பவர்; கருத்து தெரிவிக்கையில்,
தேசிய நீர் வளங்கள் வடிகால் அமைப்பு சபை குறித்த நீரினை பருகவேண்டாம் என கூறும் போது, மாகாண அமைச்சர்; ஒருவரால் நியமிக்கப்பட்ட நிபுணர்; குழு எப்படி நீரை பருகமுடியும் என கூறமுடியும். உண்மையில் நிபுணர் குழு தேசியநீர்வளங்கள் வடிகால் அமைப்பு சபையின் நிபுணர்;குழு மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ நிபுணர்; குழுவுடன் கலந்தாலோசித்திருக்கலாம். இது எதுவுமே இல்லாமல் தனிப்பட்ட சிறு குழு ஒன்றினை நியமித்து இப்படி ஆய்வு மேற்கொண்டதாக கூறி அறிக்கை வெளியிட்ட மாகாண விவசாய அமைச்சர்; ஐங்கரநேசன், மத்திய அரசாங்கத்தில் உள்ள நிபுணர் குழுவுடன் பேச முடியாது என கூறுகிறார்.
இதில் இருந்தே தெரிகிறது இவர்;களின் அறிக்கையில் நம்பிக்கையில்லை என்று. அமைச்சரிடம் பல முறை கழிவு எண்ணெய் கலந்த நீரினை எடுத்து சுழற்ச்சி முறையில் பரிசோதனை செய்யுமாறு நாங்கள் கூறியிருந்த போதும் ஒருவருடமாகியும் இன்னும் ஆய்வினை மேற்கொண்டதாக தெரியவில்லை என தெரிவித்தார்.
15 minute ago
45 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
51 minute ago