Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 12 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன்
வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், “கவனமாகச் சென்று வாருங்கள்” எனும் போக்குவரத்துப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில், அண்மைக் காலமாக சடுதியாக அதிகரித்துள்ள வீதி விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே, இந்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான செயலமர்வு, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், இன்று (12) நடைபெற்றது.
இதன்போது, கொழும்பிலிருந்து வருகைதரும் விசேட பொலிஸ் உயரதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டன. அத்துடன், இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், பின்வரும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அவற்றின் விவரங்கள் வருமாறு,
• இலங்கை மின்சார சபை மற்றும் உள்ளூராட்சி சபைகள் இணைந்து, முதற்கட்டமாக யாழ்ப்பாணம் நகரப் பகுதியில், விபத்துகள் அதிகளவில் நடைபெறும் சந்திகளாக இனங்காணப்பட்ட 15 சந்திகளுக்கு, வீதி மின்விளக்குகள் பொருத்தவுள்ளன.
• வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களம் ஆகியன இணைந்து, அதிகளவில் விபத்துகள் நடைபெற்ற வீதிகளாக இனங்காணப்பட்ட 21 சந்திகளில், வேகத் தடைகளை ஏற்படுத்தவுள்ளன.
• போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு, இரவிலும் ஒளிரத்தக்க விசேட நிறத்திலான விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன
• பாடசாலைகளை அண்டிய முக்கிய சந்திகளில், 25 விழிப்புணர்வுப் பதாதைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
• லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில், வீதி விபத்து விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வாசகங்கள் அடங்கிய பொம்மைகள், 200 வீதிகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
44 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago