2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்படாதது வருத்தமளிக்கிறது’

Editorial   / 2017 ஜூலை 11 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஸன், எஸ். ஜெகநாதன்

காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்படாதது வருத்தமளிப்பதாக, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்னிங், தன்னுடனான சந்திப்பின்போது கூறியதாக, வட மாகாண சபையின் முதலைமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழுக்கான விஜயமொன்றை மேற்கொண்ட, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்னிங்கை, தனது வாசஸ்தலத்தில், இன்று சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்படி கருத்தை விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

ஜெனிவாவுக்காக காணாமல் போனோர் அலுவலகத்தைக் கொண்டு வந்து விட்டு, அதை நடைமுறைப்படுத்த இன்னும் தவறியுள்ளார்கள். அலுவலகம் இருந்தால், மக்கள் தங்களது பிரச்சினைகளைக் கூறி, உரிய முறையில் தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பம் இருக்கும் என வைட்னிங்கிடம் தான் கூறியதாகவும், அதை அவர் ஏற்றுக்கொண்டதாகவும், விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

 இவ்வாறாக, மேற்கூறப்பட்ட விடயங்களே கலந்துரையாடப்பட்டதாகவும்,  வைட்னிங்குடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்று தெரிவித்த விக்கினேஸ்வரன், நான்கரை ஆண்டுகளாக இலங்கையில் உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய பின்னர், வைட்னிங் கனடாவுக்குச் திரும்பிச் செல்லுகின்ற நிலையில், இது ஒரு பிரியாவிடைச் சந்திப்பு சந்திப்பாகவே அமைந்ததாகக் கூறியுள்ளார்.

இதேவேளை, நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் தான் யாழ்ப்பாணம் வரும்போது, அரச புலனாய்வாளர்கள், மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வருவார்கள். அந்தநிலை தற்போது குறைவைடைந்துள்ளது, நாளுக்குநாள் நல்லவிதத்தில் முன்னேறிக்கொண்டு செல்கின்றீர்கள் என்று வைட்னிங் தெரிவித்ததாக, விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

இவைதவிர, கனேடிய மக்கள் பல செயற்றிட்டங்களை இங்கி செய்து கொண்டிருப்பதாகவும் அதைத் தொடர்ந்து செய்யவிருப்பதாகவும் வைட்னிங் கூறியதாகத் தெரிவித்த விக்னேஸ்வரன், கனேடிய மக்களுடன் சேர்ந்து, எங்களுடைய தமிழ் மக்கள் என்னென்ன விடயங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X