Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 01 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
அவருடைய அலுவலகத்தில் நேற்று (31) இடம்பெற்ற சத்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான 398 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு உள்ளடங்கலாக 617 ஏக்கர் காணி கடற்படையினர் வசமுள்ளது.
“குறித்த காணியை விடுவிக்குமாறு கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றபோதும், இந்தக் காணிகளில் கடற்படை சுவிகரிக்கும் நோக்கில் அவற்றைக் காணிகளை அளவீடு செய்ய பல தடவை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து அளவீட்டுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
“குறித்த பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளைக் கடற்படையினர் தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது. அதனை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்நிலையில், இக்காணிகளை விடுவிப்பது தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளேன்” என்றார்.
7 minute ago
48 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
48 minute ago
2 hours ago
4 hours ago