Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
செல்வநாயகம் கபிலன் / 2017 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தூர் மேற்குப் பகுதியில், கிராம சேவையாளரைத் தாக்கிய சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் 23ஆஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதிமன்ற பதில் நீதவான் ஆர். வசந்தசேனன் நேற்று (12) உத்தரவிட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தூர் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில், நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், கிராம சேவையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதன்போது கிராமசேவையாளரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பில், தனது கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தன்னைத் தாக்கியதாகத் கூறி, பாதிக்கப்பட்ட கிராம சேவையாளர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், புத்தூர் மேற்குப் பகுதியைச் சேர்ந்த நால்வரைக் கைது செய்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .