2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

கிளிநொச்சியில் 12 பேர் கைது

Editorial   / 2022 ஜனவரி 26 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு குளம் ஆற்றுப் பகுதியில்  சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

விசுவமடு, தொட்டியடி 6 ஆம் படைப்பிரிவின் இலங்கை சிங்க பிரிவின் இராணுவ முகாமுக்கு கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  5 உழவு இயந்திரங்களும் மீட்கப்பட்டுள்ளன. சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இந்த உழவு இயந்திரங்களுக்கு எந்தவித அனுமதி பாத்திரங்களும் அற்ற நிலையிலும் மணல் அகழ்வுக்கு அனுமதிகள் வழங்கப்படாத இடத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலும் 12 பேரும் கைது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X