Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 16 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் – வடமராட்சி, மருதங்ககேணி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குடத்தனை கிழக்கு பகுதியில் மணல் அகழ்வதற்கு, குடத்தனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு நான்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்க, யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கஜன் இராமநாதனால் வழியமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
குடத்தனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு, மணல் அகழ்வதற்கு வாகனங்கள் இருந்த போதிலும், அவ்வூரினை சேர்ந்த தமக்கு மணல் அகழ்வு செய்வதற்கு அனுமதி பத்திரங்கள் போதுமனதாக இல்லை என குற்றம் சாட்டப்பட்டது.
இவ்வாறன நிலையில், கடந்த (12) அன்று குடத்தனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் அங்கஜன் இராமநாதனுக்கு, தமது ஆதங்கத்தை முன் வைத்ததைத் தொடர்ந்து, அங்கஜன் இராமநாதனால், யாழ். மாவட்டச் செயலாளர் கணபதிபிள்ளை மகேசனின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு பயனாக, குடத்தனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு உடனடியாக நான்கு அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago