2025 மே 03, சனிக்கிழமை

குடிநீருக்கும் அதிக விலை; உணவகத்துக்கு எதிராக நடவடிக்கை

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக நெல்லியடியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு எதிராக யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லியடியில் உள்ள உணவகம் ஒன்றில் 35 ரூபாய் விற்பனை விலையாக பொறிக்கப்பட்ட தண்ணீர் போத்தலை 70 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள், அதிக விலைக்கு தண்ணீர் போத்தலை விற்பனை செய்தமையை உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்.

அதேவேளை, தண்ணீர் போத்தலை சான்று பொருட்களாகவும் கைப்பற்றினர்.

அதனை நீதிமன்றில் பாரப்படுத்தி, குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடுகள் வழங்கும் போது விரைந்து சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X