Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் – சுன்னாகத்தில் பொலிஸ் நிலையம் அமைப்பதுக்காக குடிமனைக்கு நடுவில் உள்ள பொது மக்களின் காணியை சுவீகரிப்பதுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் உடுவில் பிரதேச செயலகம் முன்பாக இன்று (10) முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த காலங்களில் கடத்தல், சித்திரவதை மற்றும் கொலை போன்ற மனிதத்துவத்துக்கு எதிரான பல செயற்பாடுகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார், மக்கள் குடிமனைக்கு நடுவில் வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்தோடு குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் மக்கள் உடுவில் பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளனர்.
சுன்னாகம் – புன்னாலைக்கட்டுவன் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு, அதே வீதியில் உள்ள மிருக வைத்திய சாலைக்கு அருகில் உள்ள அரச காணியை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் குறித்த அரச காணி தமக்கு பொருத்தம் இல்லை என்று கூறிவரும் சுன்னாகம் பொலிஸார் சுன்னாகம் பகுதியில் கே.கே.எஸ் வீதிக்கு மிக அருகில் உள்ள புலம் பெயர் நாடு ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ள பொது மகன் ஒருவருடைய 14 பரப்பு காணியை தருமாறு கோரி வந்தனர்.
இதன்படி அக்காணியை சுவீகரித்து பொலிஸாருக்கு ஒப்படைப்பதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே சுன்னாகம் பகுதி மக்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
18 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago