2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

குமுதினிப் படகு படுகொலை 33 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

எம். றொசாந்த்   / 2018 மே 15 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு  இன்று (15) அஞ்சலி செலுத்தப்பட்டது.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து  64 பயணிகளுடன் குமுதினி படகு தனது பயணத்தை வழமை போல ஆரம்பித்தது. படகு அரை மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தவேளை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

இதனை நினைவு கூரும் முகமாக நெடுந்தீவு துறைமுக பகுதியில் அமைந்துள்ள நினைவு தூபி முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் விந்தன் கனகரட்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .