2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

குருநகர், பாசையூருக்குச் செல்லத் தடை

Niroshini   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்

குருநகர், பாசையூர் ஆகிய பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு, பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குருநகர் பகுதியில், நேற்று  (26), இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையிலேயே, மக்கள் நெருக்கம் அதிகமுள்ள குருநகர் பகுதியில் இருந்து, ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக, அப்பகுதியைச் சாராதவர்கள், வெளிநபர்கள் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குருநகரில் உள்ள பிரதான நான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பொலிஸார், இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .