Freelancer / 2022 செப்டெம்பர் 03 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள தொல்லியல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு சிலர் இடையூறாக இருப்பதாக பொலிஸ் நிலையத்தில் குருந்தூர் மலையில் இருக்கின்ற பௌத்த பிக்குகள் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த சில தினங்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முல்லைத்தீவு பொலிஸார் நேற்று (02) முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்துக்கு வாக்கு மூலத்தை பெற்றுக் கொள்ள வருகைதருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதன்படி முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் கந்தையா சிவநேசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் யூட் நிக்சன் ஆகியோர் பொலிஸ் நிலையத்துக்கு வருகைதந்த நிலையில் அவர்களிடம் மிக நீண்டநேரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வாக்குமூலம் பெற்று கையொப்பம் வாங்கி கொண்டுள்ளனர்.
வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பொலிஸார் மேற்கொண்ட விசாரணை தொடர்பில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில் ,
கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த தேரர்களால் கபோக் கல்லினால் செய்யப்பட்ட புத்தர் சிலை ஒன்றை வைப்பது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டமை தொடர்பில் தமது பௌத்த வழிபாடு தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மணலாறு சம்புமல்ஸ்கட விகாரையின் தேரர் கல்கமுவ சாந்த போதி தேரர் மற்றும் ஏனைய தேரர்களால் எமக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்ட்டுள்ளமைக்கு அமைவாக, இன்று என்னிடம் ஏனைய மக்கள் பிரதிநிதிகளிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதாவது ஜூன் 12 நடைபெற்ற போராட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொண்டார்கள் . பொதுமக்கள் யாரெல்லாம் வந்தார்கள் அவர்களுடைய பெயர் விபரங்கள் வருகை தந்த ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்கள் போன்றவற்றை கேட்டு நீண்ட விசாரணையை செய்த பொலிஸார் எம்மிடம் வாக்குமூலம் பதிந்து கொண்டதோடு கையொப்பமும் பெற்றுக்கொண்டார்கள் என தெரிவித்தார் . (R)
23 minute ago
27 minute ago
36 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
36 minute ago
42 minute ago