2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

குறைந்த வருமானம் பெறுவோர் தொடர்பில் தகவல் சேகரிகப்பு

Editorial   / 2020 மார்ச் 17 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

குறைந்த வருமானம் பெறுவோர் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கையில், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் ஈடுபட்டுள்ளது.

ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மானிய முறையில் உணவுப் பொதி வழங்கும் திட்டத்துக்கமைய, தரவு சேகரிக்கப்படுகின்றது.

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த நுகர்வுப் பொருள்களைக் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், வரையறுக்கப்பட்ட லங்கா சதொச, வரையறுக்கப்பட்ட இலங்கை சந்தைப்படுத்தல் சங்கம், இலங்கை நுகர்வோர் சங்கம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றினூடாக வழங்குவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கின்றது.

குறைந்த வருமானம் பெறும் சமுர்த்தி நிவாரணம் பெறாத  அங்கத்தவர்கள், நிரந்தர தொழிலற்ற விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், அங்கவீனமுற்றோர் விதவைகள், வருமானமற்ற முதியோர்கள் ஆகியோரை இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படுவதற்கான தகவல்களைத் திரட்டும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

கிராம அலுவலர்கள் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி அலுவலர்கள் ஆகியோர் ஊடாகத் தரவு சேகரிக்கப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X