2025 ஜூலை 21, திங்கட்கிழமை

குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களின் பதவி ஒரு வாரத்தில் பறிபோகும்?

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன் 

வடமாகாணக் கல்விப் புலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில், இன்னும் ஒரு வார காலத்துக்குள் பதலளிப்பதாக, வட மாகாண ஆளுநர் ​றெஜினோல்ட் குரே தெரிவித்தார். 

வடமாகாண ஆளுநருக்கும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு, நேற்று (22) மாலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இச்சந்திப்பின் போது, வடமாகாணக் கல்விப் புலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில், ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.  

இதற்கமைய, முன்னாள் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளரும், தற்போது மடு வலயத்துக்கு கல்விப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள திருமதி மாலினி வெனிற்றன் மற்றும் வவுனியா விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றி, தற்போது மன்னார் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் தனபாலசிங்கம் ஆகியோரின் முறையற்ற மீள் நியமனங்கள் தொடர்பாகவே ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன. 

இதனடிப்படையில், க.தனபாலசிங்கத்துக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில், இவர் 55 வயதுடன் அரச சேவையில் இருந்து 04.04.2017 அன்று கட்டாய ஓய்வு பெறவேண்டும் என்று ஒழுக்காற்று தண்டனை விதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.  

 ஆனால், தற்போது வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அவர் சேவையை தொடர அனுமதி வழங்கியுள்ளமையையும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் சிபாரிசில் தனபாலசிங்கம் தொடர்பான நிதிக் குற்றச்சாட்டுகள் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதேவேளை, திருமதி மாலினி வெனிற்றனுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில், இவர் 396,450.00 பணத்தை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும் என்பதுடன், 01.07.2017 அன்று அரச சேவையில் இருந்து கட்டாய ஓய்வு பெறவேண்டும் என்ற ஒழுக்காற்றுத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆளுநரின் அனுமதிக்கமையவே, மடு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார் என ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இவற்றைக் கவனத்தில் எடுப்பதாகக் கூறிய ஆளுநர், ஒரு வார காலத்துக்குள் இது தொடர்பாக ஆராய்ந்து பதிலளிப்பதாக தெரிவித்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேவேளை, திருமதி மாலினி வெனிற்றனுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில், இவர் 396,450.00 பணத்தை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும் என்பதுடன், 01.07.2017 அன்று அரச சேவையில் இருந்து கட்டாய ஓய்வு பெறவேண்டும் என்ற ஒழுக்காற்றுத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆளுநரின் அனுமதிக்கமையவே, மடு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார் என ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

 

இவற்றைக் கவனத்தில் எடுப்பதாகக் கூறிய ஆளுநர், ஒரு வார காலத்துக்குள் இது தொடர்பாக ஆராய்ந்து பதிலளிப்பதாக தெரிவித்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .