2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

’குற்றவியல் நீதித்துறை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்’

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

“குற்றவியல் நீதித்துறை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். அதற்கான முன்மொழிவு செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைகழகத்தின் சட்ட பீடத்தின் எற்பாட்டில் நீதியின் மறுமலர்ச்சியில் மக்களின் எதிர்காலத்தின் தன்மை எனும் கருப்பொருளில் நீதம் நூல் வெளியீட்டு நிகழ்வு, யாழ் பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில், யாழ். பல்கலைகழக சட்டத்துறை பீடத்தின் மாணவ ஒன்றிய தலைவர் அன்டனி ரொபோசன் தலைமையில்  நேற்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வட மாகாண சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட பிராந்திய அமைப்பாளரும் ஐனாதிபதி சட்டத்தரணியும் ஆகிய சாந்தா அபிமன்யுசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் குறித்த நிகழ்விலேயே மேற்கூறப்பட்ட கருத்தை வெளிப்படுத்திய நீதிபதி இளஞ்செழியன், “நீதித்துறை வினைத்திறனாகச் செயற்பட வேண்டும் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை. குற்றவியல் நீதிமன்றம் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்படவேண்டும். அவதானம் செலுத்தப்படுவது வெறும் தண்டனை வழங்குவதற்கு அர்த்தப்படாது” என மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .