2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

குளவிக் கொட்டால் ஐவர் வைத்தியசாலையில்

க. அகரன்   / 2018 மே 03 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் குளவி கொட்டுக்கு உள்ளாகி ஊடகவியலாளர் உட்பட ஐவர் வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று (03) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா இரட்டை பெரியகுளம் மகா வித்தியாலயத்தை சேர்ந்த ஆசிரியர்கள் 4 பேரும் குளவி தாக்குதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரும் குளவி கொட்டுக்கு உள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இக் குளவி தாக்குதல் குறித்து பாடசாலையின் அதிபர் எம்.நந்தசேன தெரிவிக்கையில்,

கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி எமது பாடசாலையில் குளவி கொட்டியதில் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்றிருந்தார். குளவித்தாக்குதல் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவம் மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றுக்கு தகவல் வழங்கிய போதிலும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இதன்போது, பாடசாலையிலிருந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .