Editorial / 2018 மார்ச் 29 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதுக்கு, கூட்டமைப்பு ஏனையோரிடம் மண்டியிட்டு விட்டது என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈ.பி.டி.பியை ஒட்டுக்குழு, தமிழ் மக்களுடைய எதிரி, துரோகி, போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்றெல்லாம் கூறி வந்த கூட்டமைப்பு இன்றைக்கு தாம் ஆட்சியமைப்பதுக்காக ஈ.பி.டி.பியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி அவர்களது ஆதரவைப் பெற்றுச் சபைகளில் ஆட்சியமைத்து வருகின்றார்கள்.
அதேபோல ஆளுந்தரப்பில் இருக்கக் கூடிய ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளதும் ஆதரவையும் பெற்றிருக்கின்றனர். ஆகவே வடகிழக்கில் அமைக்கப்படுகின்ற உள்ளுராட்சி சபைகள் என்பது 3 கட்சிகள் இணைந்த கூட்டு ஆட்சியாகவுள்ளது.
முன்னர் பெரிய கொள்கைப் பிடிப்பாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டவர்கள், ஈ.பி.டி.பியுடன் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தவர்கள் இன்றைக்கு அரசாங்கத் தரப்புடன் இணைந்து தான் இந்தச் சபைகளை உருவாக்குகின்றார்கள் என்பது வெட்கக்கேடான விடயம்.
இதன்மூலம், இதுவரையும் அவர்கள் சொல்லி வந்த கொள்கை, கோட்பாடு சகலதையும் கைவிட்டு விட்டார்கள்.
தமது பதவிகளுக்காகவும் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதுக்காகவும், ஏனையோரிடம் மண்டியிட்டு விட்டார்கள் என்பதுதான் வெளிப்படையான உண்மை என தெரிவித்துள்ளார்.
5 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
2 hours ago