2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

‘கூட்டமைப்பு பலமான கட்சியாக பரிமாணிக்க வேண்டும்’

Editorial   / 2017 டிசெம்பர் 09 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான அரசியல் கட்சியாக பரிமாணிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டு உள்ள பிளவு நிலை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என, நேற்று (08) ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கே, அவர் அவ்வாறு பதிலளித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“சுயநலம் ஏற்படும்போது, இவ்வாறன பிளவுகள் ஏற்படுவது வழக்கம். அதே சுயநலமே அந்த பிளவுகளை சரி செய்யவும் உதவும். 1949ஆம் ஆண்டு தந்தை செல்வா காங்கிரஸில் இருந்து பிரிந்தார். யுத்தம் முடிவடையும் கால கட்டத்தில் சுயநலம் காரணமாக பிரபாகரனை விட்டு சிலர் பிரிந்தனர். 

“ஆகவே பிளவுகள், கொள்கைகளில் நிமித்தம் ஏற்படும். சுயநலம் காரணமகாவும் ஏற்படலாம். இன்றைய பிளவு எவ்வாறு ஏற்பட்டது என்பதனை நீங்களே ஆய்ந்து அறிந்து கொள்ளுங்கள். அது அரசியல் அவதானிகளின் வேலை. 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கைகளை எமது தமிழ் மக்களின் நெடுங்கால பாதுகாப்புக்காகவும்  அபிவிருத்திக்கும் வளர்சிக்கும் மாற்றி யாவரையும் உள்ளடக்கி ஒற்றுமையுடன் ஒரு பலமான அரசியல் கட்சியாக பரிமாணிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு” எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .