Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 08 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களுக்குமிடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டது.
வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டுள்ள தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி யாழ் நீரியல் வளத் திணைக்களத்தை முற்றுகையிட்டு நிர்வாக முடக்கல் போராட்டத்தில் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, தெற்கில் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, வடக்கில் கண்துடைப்பு வேலைகளில் ஈடுபடக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைத்தாக்கி தெரிவித்தார்.
இதனையடுத்து, இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையிலும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து, இரண்டு தரப்பு ஆதரவாளர்களும் அங்கிருந்த மீனவர்களால் சமரசப்படுத்தப்பட்டு தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .