2025 ஜூலை 19, சனிக்கிழமை

கைதான நபர் உயிரிழப்பு: விசாரணை ஆரம்பம்

Niroshini   / 2021 ஒக்டோபர் 04 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

ஒக்டோபர் 1ஆம் திகதியன்று, மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு நபர்களில் சம்சுதீன் மொஹமட் றம்சான் என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை அடிப்படையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடபிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர், சுகவீனமுற்ற நிலையில், மன்னார் வைத்தியசாலையில் அனுமதித்த வேளை உயிரிழந்துள்ளார் என்றார்.

 இதன் முதல் கட்டமாக, குறித்த இரு நபர்களது கைதுடன் தொடர்புடைய விடயங்களை மன்னார் பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும், அவர் தெரிவித்தார்.

மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை பெறுவதற்கான வேண்டுகோள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட மற்றொரு நபரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், அவர் கூறினார்.

மேற்படி இந்த முறைப்பாடு 1996ஆம் ஆண்டு 21ஆவது இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14இன் பிரகாரம், ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும், அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X