2025 மே 19, திங்கட்கிழமை

கைப்பையில் இருந்து 25 பவுண் நகை, பணம் திருட்டு

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 10 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவரின் கைப்பையில் இருந்து 25 பவுண் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் என்பன நேற்று (09) புதன்கிழமை மாலை களவாடப்பட்டுள்ளது.

சுன்னாகம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பஸ்ஸில் குறித்த பெண் பயணித்துள்ளார். அதன்  போது தனது கைப்பையில்

யாழில் பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவரின் கைப்பையில் இருந்து 25 பவுண் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் என்பன நேற்று (09) புதன்கிழமை மாலை திருடப்பட்டுள்ளது  என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுன்னாகம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பஸ்ஸில் குறித்த பெண் பயணித்துள்ளார். அதன்  போது தனது கைப்பையில் 25 பவுண் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்திருந்துள்ளார்.

பஸ்ஸில் காணப்பட்ட கூட்ட நெரிசல்களை தமக்கு சாதகமாக்கிய திருடர்கள் குறித்த பெண்ணின் கைப்பையில் இருந்து பணத்தினையும் நகையையும் களவாடி உள்ளனர்.

குறித்த பெண் யாழ்.நகரை வந்தடைந்து தனது கைப்பையை பார்வையிட்ட போது, நகையும் பணமும் திருடப்பட்டதை அறிந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

25 பவுண் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்திருந்துள்ளார்.

பஸ்ஸில் காணப்பட்ட கூட்ட நெரிசல்களை தமக்கு சாதகமாக்கிய திருடர்கள் குறித்த பெண்ணின் கைப்பையில் இருந்து பணத்தினையும் நகையையும் களவாடி உள்ளனர்.

குறித்த பெண் யாழ்.நகரை வந்தடைந்து தனது கைப்பையை பார்வையிட்ட போது, நகையும் பணமும் களவாடப்பட்டதை அறிந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X