Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதிகளில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்ட நிலையில், கடத்த சில தினங்களாக அப்பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் வீதி சோதனை நடவடிக்கைளிலும் சுற்றுக்காவல் (ரோந்து) பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு நான்கு இடங்களில், ஆறு பேர் கொண்ட வாள் வெட்டு குழு அட்டகாசத்தை புரிந்திருந்தன
நாச்சிமார் - கோவிலடியில் வீதியால் சென்ற பட்டா ரக வாகனத்தை வழிமறித்து சாரதியை தாக்கியதுடன், வாகனத்தையும் அடித்து நொறுக்கி சேதத்தை ஏற்படுத்தினார்கள்.
பின்னர் தம்பி லேன் பகுதியில் உள்ள கடை ஒன்றை அடித்து உடைத்து சேதப்படுத்தி பின்னர் அங்கிருந்து சென்று கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து ஹயஸ் ரக வாகனம் ஓட்டோ என்பவற்றை அடித்து நொறுக்கியதுடன், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து உடைத்து சேதமாக்கினார்கள்.
அதன் பின்னர் அங்கிருந்து சென்று ஓட்டுமடம் பகுதியில் வீதியால் சென்றவர்களை வாளைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போதிலும், மூன்று நாள்கள் கடந்த நிலையிலும், எவரும் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையிலேயே, தற்போது பொலிஸ் விசேட அதிரடி படையினர் சோதனை நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, தமக்கு அதிகாரத்தை தந்தால் இரண்டு நாள்களுக்குள் யாழில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை கட்டுக்குள் கொண்டு வர தம்மால் முடியும் என, இராணுவ தளபதி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
23 minute ago
36 minute ago